Header image alt text

ssdவடக்கில் முன்னெடுக்கப்பட்ட மற்றுமொரு அறவழிப் போராட்டத்திற்கு இன்று சாதகமான பதில் கிட்டியுள்ளது. இதற்கமைய, மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் கடற்படையினர் வசமிருந்த பொதுமக்களின் 100 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிக்குளத்தில் கடற்படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மக்கள் 36 நாட்களாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில், இந்த காணிகளை விடுவிப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் முள்ளிக்குளம் கடற்படைத் தளத்தில் இன்று நடைபெற்றது. Read more

modi maithriஉத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வெசாக் தினக் கொண்டாட்டத்தில் பங்குபற்றுவதன்றி, வேறு எந்தவொரு உத்தியோகபூர்வ நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டாரென, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாட்டின் சில பகுதிகளை சொந்தமாக்கிக் -கொள்ளும் வகையில் உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கு இந்தியப் பிரதமர், இலங்கை வருகிறார் என சில இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் பல்வேறு போலிப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, Read more

north missing protestகிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள் தமது குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும் அடிப்படை வசதிகள் நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன இதுவரை கிடைக்கவில்லை.

எனவே கடந்த பல வருடங்களாக அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம். இனியும் வாழ முடியாது தயவு செய்து எமக்கான காணி உரிமத்தினை வழங்குங்கள் எனக் கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று சனிக்கிழமையுடன் 39ஆவது நாளாக தொடர்கின்றது. அத்துடன் தமக்கான காணி உரிமம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். Read more