வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் இன்று காலை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இது வரையில் வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தனித்தனியாக போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்களது தனித்தனியான போராட்டங்களுக்கு அரசாங்கம் பதிழலிக்காத நிலையில் அனைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் ஒன்றிணைத்து ஒர் அமைப்பை உருவாக்குவது தொடர்பாகவே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. அனைத்து வடக்கு கிழக்கு மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரிதிநிதிகள் இன்றைய குறித்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.