1mai zhதோழமை உணர்வுள்ள சுவிஸ்  வாழ்  தமிழ்மக்களே! கழகத்தோழர்களே! தோழமைக்கட்சி உறுப்பினர்களே! ஆதரவாளர்களே!
   
சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் 2017 மே முதலாம் திகதி சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் கலந்து கொள்ளும் தொழிலாளர் தினத்தில் பேதங்கள் இன்றி நாமும் கலந்துகொண்டு, இலங்கை தாயகத்தில் தமிழினத்தின் ஜனநாயக அரசியல் தீர்வை அரசு அங்கீகரிக்க சர்வதேசம் தனது நியாயமான பங்களிப்பை செய்யக்கோரி குரல் கொடுத்து எமதின உரிமைப் போராட்டத்தை ஜனநாயக வழியில் உறுதியான வெற்றிக்கு இட்டுச்செல்ல வலுச்சேர்ப்போமாக.  எம் ஒவ்வொருவரையும் இந்த போராட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயக் கடமையில்  உள்ளோமென்பதை நாம் ஒவ்வொருவரும் நன்கு அறிவோம், அந்தவகையில் கடைமையுணர்வுள்ள ஒவ்வொரு தமிழரும் தம்மாலியன்ற பங்களிப்பினை செய்ய வேண்டும் என  த.ம.வி.கழகம் தோழமையுடன் கேட்டுக் கொள்ளும்; அதேவேளையில், மக்களின் விடுதலைக்கு தோள் கொடுக்க விரும்பும் அனைவரையும் இவ்மேதின ஊர்வலத்திற்கு தோழமையுடன் அழைக்கின்றோம்.
 
இம்முறை மேதின ஊர்வலமானது 10.00மணிக்கு தொடங்கி இப்பாதையில் சென்று Helvetiaplatz führt die Route über die Ankerstrasse – Gessnerbrücke  – Löwenplatz – Löwenstrasse – Bahnhofplatz – Bahnhofstrasse – Uraniabrücke – Limmatquai zum Sechseläutenplatz, முடிவடையும்!!!

மனித இனம் பெருகிக்கொண்டே நவீனமயப்படுகிறது
அடக்குமுறையும் நவீன முறையில் பெருகிக்கொண்டேயிருக்கிறது.
 
அனைத்து அதிகாரங்களும்  உழைக்கும் மக்களுக்கே.!
 
                 
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ((P.O.T.E) 
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (D.P.L.F)
சுவிஸ்கிளை
 
தொடர்புகட்கு: 077.9591010 / 078.9167111 / 076.5838410 /  077.9677803 / 077.9485214