Header image alt text

suyam helps Germany (5)புலம் பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளையினர், புதுக்குடியிருப்பு, கைவேலி கிராமத்தில் அமைந்துள்ள ‘சுயம்’ என அழைக்கப்படும், வறிய நிலையில் உள்ள பெண்களினால் ஒன்றிணைந்து நடாத்தப்படும் உணவுப் பொருட்கள் உற்பத்தி நிலையத்தினை மேம்படுத்தும் செயற்பாடுகளுக்காக ரூபா 25000/- நிதியுதவியினை வழங்கியுள்ளனர். 

Read more

anpu04புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் முல்லைத்தீவு, முத்தையன்கட்டு பிரதேசத்தில் அமைந்துள்ள ‘அன்பு’ சிறுவர் இல்லத்திற்கு அவர்களின் மதியநேர உபசரணைச் செலவினை பூர்த்திசெய்யும் வகையில் ரூபா 15000ஃ- நிதியுதவி வழங்கிவைப்பட்டுள்ளது. Read more

jevanagar02முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவின் முத்தையன்கட்டுக்குளம் கிராம அலுவலர் பிரிவின் ஜீவநகர் கிராம மக்களுடன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் பொருளாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான க. சிவநேசன் (பவன்) அவர்களின் சந்திப்பு ஒன்று நேற்று 25.04.2017 செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. 

Read more

selva01தந்தை செல்வாவின் 40ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் ஆகியோர்  தந்தை செல்வநாயகத்தின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தினர். 

Read more

sivan11புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தின்  எல்லப்பர் மருதங்குளம் முதியோர் இல்லத்துக்கு இன்று (25.04.2017) செவ்வாய்க்கிழமை ரூபாய் 15,000/- நிதியினூடாக விசேட மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சுவிஸ் கிளை உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஓராண்டு நினைவுதினத்தை முன்னிட்டு முதியோர்க்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்ட நிதியிலிருந்து மேற்படி (இரண்டாவது) உதவி வழங்கப்பட்டுள்ளது. Read more

navali01இன்று வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக லண்டன் நாட்டை சேர்ந்த பரஞ்சோதி லோகஞானம் அவர்களால் சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்பாள் ஆலயதின் வருடாந்த உற்சவ திருவிழாவான கொடியேற்ற திருவிழாவை முன்னிட்டு நாவாலியை சேர்ந்த உதவி தேவைப்படும் குடும்பத்தை தெரிவு செய்து 10000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் என்பவற்றை சங்க தலைமை காரியாலத்தில் வைத்து அன்பளிப்பு செய்துள்ளார். Read more

sureshஇலங்கையின் மனித உரிமை விவகாரங்களில் இதுவரை முன்னேற்றம் ஏற்படாத நிலையில் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கக்கூடாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமசந்திரன் கூறியுள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், Read more

hotமே மாதம் வரை கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலை தொடரவுள்ளதால் பொதுமக்கள் உஷ;ணத்திலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள அவசியமான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கடும் வெப்பநிலை நிலவிவருவதாக வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. Read more

franceநேற்று நடைபெற்ற பிரான்ஸின் அதிபர் தேர்தலில், மையவாத கட்சியைச் சேர்ந்த இமானுவேல் மக்ரோங், தீவிர வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த மரைன் லெ பென்னை எதிர்கொள்ளவுள்ளதாக, தேர்தலின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஞாயிறன்று, முதற்சுற்றில் 96 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மக்ரோங் 23.9 சதவீதமும் மரைன் லெ பென் 21.4 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளதாக தெரிகிறது. Read more

sulipuram07சுழிபுரம் பெரியபுலோ சன்ஸ்ரார் விளையாட்டு கழகம் நடாத்திய வருடாந்த மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி
மட்டுப்படுத்தப்பட்ட அணிக்கு 9 வீரர்கள் 8 பந்து பரிமாற்றம் கொண்டபோட்டிகளின் இறுதிப் போட்டியில் விக்ரோறியான்ஸ் விளையாட்டு கழகம் எதிர் அம்பாள் விளையாட்டு கழகம் விளையாடியது இப்போட்டி திருவடிநிலை அ.த.க பாடசாலை மைதானத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இப்போட்டியில் சுழிபுரம் விக்ரோறியான்ஸ் விளையாட்டு கழகம் வெற்றிபெற்றது.

இந் நிகழ்வில் பிரதமவிருந்தினராக புளொட் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கிவைத்தார்.
Read more