retrtrதந்தை செல்வா நற்பணி மன்றத்தால் வருடாந்தம் நடத்தப்படும் தந்தை செல்வநாயகம் அவர்களின் நினைவு தினம் இம்முறையும் கொழும்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

மேற்படி நினைவு தின அனுஷ்டிப்பு நேற்று (30.04.2017) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4மணியளவில் கொழும்பு விவேகானந்தா சபை மண்டபத்தில் தந்தை செல்வா நற்பணி மன்றத் தலைவர் ஏ.சந்தனம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மொழிகள் அமுலாக்கல் அமைச்சர் மனோ கணேசன் அவர்களும், விசேட அதிதியாக பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் கே.ரி.குருசாமி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.வேலணை வேணியன் அவர்கள் வாழ்த்துரையாற்றியதோடு, தலைமையுரையினை மாவை வீ.சோமசுந்தரம் (பிரதித் தலைவர், தந்தை செல்வா நற்பணி மன்றம்) அவர்கள் ஆற்றினார். வரவேற்புரையினை லயன் எஸ்.கே. தளையசிங்கம் (ஜே.பி, பொதுச்செயலர் தந்தை செல்வா நற்பணி மன்றம்) அவர்கள் நிகழ்த்தினார்.

இதன்போது தந்தை செல்வா அறநெறி பாடசாலை மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. தொடர்ந்து கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் என சிறந்த சேவைச் செம்மல்கள் 24பேர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டு தந்தை செல்வா விருது வழங்கப்பட்டதோடு, பரீட்சையில் கூடிய புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கு பதங்கங்களும் வழங்கப்பட்டன. மேலும், கண் பரிசோதனை செய்தவர்களுக்கு கண்ணாடிகளும் வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

IMG_1644IMG_1616IMG_1642IMG_1636IMG_1642IMG_1479IMG_1463IMG_1451IMG_1484IMG_1434IMG_1425

asdfsa dfdsf dsfd dsfdsfd dsfdsfddd

sdfd