sfdfdfவட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக லண்டன் நாட்டைச் சேர்ந்த பரஞ்சோதி லோகஞானம் அவர்களால் சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்பாள் ஆலயதின் வருடாந்த உற்சவ திருவிழாவை முன்னிட்டு சங்கரத்ததை துணைவி சந்தியை முகவரியாகக் கொண்டு வாழும் செல்லத்துரை சறோஜினிதேவி என்பவரது குடும்பத்தை தெரிவுசெய்து அவரது சிறு வியாபார நிலையத்தை ஊக்குவிக்கும் முகமாக ரூபா 18000 பெறுமதியான 1 மூடை பருப்பு, 1 மூடை சீனி, 1 மூடை அரிசி, 1 மூடை மா ஆகிய வியாபார பொருட்களை அன்பளிப்பு செய்துள்ளார். சண்டிலிப்பாய் சீரணி ஆலய வருடாந்த உற்சவ திருவிழாவை முன்னிட்டு மூன்றாவது தடவையாக இவ் அறக்கருமம் ஆற்றிய ஆலய நிர்வாகத்தினரான பரஞ்சோதி லோகஞானம் அவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் பயனாளிகளின் குடும்பம் சார்பாகவும் நன்றிகளை கூறிக்கொள்ளும் தருணம் அம்பாளின் நிர்வாகத்தினரின் இவ் உயரிய சிந்தனைக்கு சண்டிலிப்பாய் சீரணிநாகபூசனி அம்மனின் அருள்ளாசிகள் வேண்டி நிற்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)