Posted by plotenewseditor on 3 May 2017
Posted in செய்திகள்

கிளிநொச்சி உருத்திரபுரம் பூநகரி வீதியில் உள்ள நீவில் பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. உருத்திரபுரம் நீவில் குளத்திற்கு அருகில் உள்ள பாரிய கிணற்றை இயந்திரத்தினால் மூடும் நடவடிக்கையில் பொது மக்கள் ஈடுப்பட்டிருந்த போதே சுமார் 17 மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதேவேளை திருகோணமலை மூதூர் 7ம் வட்டாரம் தாஹா நகர் நீதிமன்ற வீதியில் உள்ள காணி ஒன்றின் தென்னந்தோப்பில் இருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்றுமாலை 3.30 மணியளில் மூதூர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, எஸ்.எப் ஜி-87 ரக கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. கைக்குண்டு திருமலை விஷேட அதிரடைப்படையால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.