pressபத்திரிகை சுதந்திரத்துக்கான சர்வதேச தினம் இன்று(03) உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் காவலனாய் அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்புவதில் முன்னிற்கும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் பல்வேறு அச்சுறுத்தல்களையும் தடைகளையும் எதிர்கொள்கின்றனர்.

இந்நிலையிலேயே ஐக்கிய சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தின் 19ஆவது திருத்தத்தில் உள்ள பேச்சுரிமையை உறுதிப்படுத்தும்  வகையிலும் அவற்றை சர்வதேச நாடுகளுக்கு நினைவூட்டும் வகையிலும் ஐக்கிய நாடுகளினால் இன்றைய தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. 1993ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைய ஒவ்வொரு ஆண்டும் மேமாதம் 03ஆம் திகதி உலக பத்திரிகை சுதந்திரத்துக்கான நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  1991ஆம் ஆண்டு மேமாதம் 3ஆம் திகதி ஆபிரிக்க பத்திரிகைகளால் கூட்டாக பத்திரகை சுதந்திர சாசனம் உருவாக்கப்பட்டதுடன், உலக பத்திரிகை சுதந்திரத்துக்கான தினம் பிரகடனப்படுத்தப்பட காரணமான அமைந்தது. ஊடக சுதந்திர பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு இன்றைய நாள் யுனெஸ்கோவினால் உலக பத்திரிகை சுதந்திரத்துக்கான விருது வழங்கப்படும். இந்நிலையில், உலக பத்திரகை சுதந்திரத்துக்கான பட்டியலில் 2016ஆம் ஆண்டு இலங்கை 141ஆவது இடத்துக்கு முன்னேறியிருந்தமை இங்கு  குறிப்பிடத்தக்கது.