viki 1

ஐக்கிய நாடுகள் அமைப்பு திறமையாக செயற்பட்டிருந்தால் வடக்கில் பல்லாயிரக்கணக்கானோர் இறந்திருக்க மாட்டார்கள் என்று ஐநா வின் அபிவிருத்தி செயற்பாட்டிற்கான அதிகாரியிடம் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இன்றைய தினம் முதலமைச்சரை சந்தித்த ஐநா வின் அபிவிருத்தி செயற்பாட்டிற்கான அதிகாரியிடம் இவ்வாறு தெரிவித்ததாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

இந்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்த விக்னேஸ்வரன், 

ஐக்கிய நாடுகள் சபையானது மத்திய அரசுடன் மட்டும் தொடர்புகளை வைத்துகொண்டு செயற்படுகிறார்கள். இதனை ஏற்று கொள்ள முடியாது. ஏற்கனவே மத்திய அரசு மாகாணத்தை புறந்தள்ளி தாம் நினைத்ததை செயற்படுத்தி வருகின்றது. இனிவரும் காலங்களிலாவது ஐ நா இதனை திருத்தி மாகாண அரசுடனும் தொடர்புகளை பேண வேண்டும். குறிப்பாக போர் இடம்பெற்ற 2009 காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபை சிறப்பாக செயற்பட்டு மத்திய அரசின் செயல்பாட்டில் தலையிட்டிருந்தால் இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் இறக்காமல் காப்பாற்றி இருக்கலாம். இனியும் அவ்வாறான ஒரு தவறை ஐ நா செய்துவிட கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்