vadduவட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக எமது புலம்பெயர் உறவான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த திருஞானசம்பந்தழூர்த்தி கிஸ்னதாஸ் என்பவரினால் புத்தூரை சேர்ந்த சிவபிரகாஸ் மாலினி என்பவருக்கு ஒரு புதிய துவிசக்கரவண்டியை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க தலைமை காரியாலத்தில் வைத்து அன்பளிப்பாக வழங்கியுள்ளார். மேற்படி சிவபிரகாஸ் மாலினி தனது விண்ணப்பத்திலும் நேரடியாகவும் எமக்கு தெரிவிக்கையில் தனது கணவன் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர் என்றும். தானும் தனது மகனும்(6 வயது) இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்.பாடசாலைக்கு பிள்ளைகளை கூட்டி செல்வதற்கு ஒரு துவிசக்கரவண்டி வேண்டுவதற்கு கூட முடியாத நிலையில் மிகவும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பம் என்றும் தங்கள் குடும்பத்திற்கு அரசாங்கத்தினால் கொடுக்கும் Pஆயு பணம் மாதாந்தம் ரூபா 400 மட்டும் கிடைப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில் தான் ஓர் துவிசக்கரவண்டிக்காக மாகாணசபை உறுப்பினர்கள் சிலரிடமும் மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடமும் தமது விண்ணப்பத்தை கொடுத்துள்ள போதும் எவரும் தமக்கு ஒரு துவிசக்கரவண்டியை தருவதற்கு முன்வரவில்லை என்றும். தம்மை சந்தித்த நபர் ஒருவரே வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் உங்கள் விண்ப்பத்தை தெரிவியுங்கள் என்று கூறி தொலைபேசி இலக்கமும் தந்திருந்ததாகவும் அதற்க்கமைவாகவே தனது விண்ணப்பத்தை உங்களுக்கு அனுப்புவாதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இன்று இக் கைங்கரியம் செய்துள்ள திருஞானசம்பந்தழூர்த்தி கிஸ்னதாஸ் அவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் பயனாளியின் குடும்பம் சார்பாகவும் நன்றிகளை கூறிக்கொள்ளும் தருணம் இவர்களின் சேவை பாதிக்கபட்ட எங்கள் மக்களுக்கு தொடரவேண்டும் என்றும் கடவுளை பிராத்திக்கின்றோம்.