May 17
7
Posted by plotenewseditor on 7 May 2017
Posted in செய்திகள்
33ஆவது முதலமைச்சர்கள் மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஹபரணையில் இன்று நடைபெற்றுள்ளது. அடுத்த முதலமைச்சர்கள் மாநாடு வட மேல் மாகாணத்தில் இடம்பெறவுள்ளதுடன், மாகாணத்தின் முதலமைச்சர் இன்று அதன் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த மாநாட்டில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன், கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.