May 17
7
Posted by plotenewseditor on 7 May 2017
Posted in செய்திகள்
நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு எதிர்வரும் 12ம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில், இலங்கை வரும் இவர், எதிர்வரும் 13ம் திகதி இடம்பெறவுள்ள சர்வதேச வெசாக் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார். 2015 ஆம் ஆண்டு நேபாள ஜனாதிபதியானதன் பின்னர் பித்யா தேவி பண்டாரி மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும். இதேவேளை, சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று முதல் வெசாக் வாரத்தை பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 13ம் திகதி வரை வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக, புத்தசாசன அமைச்சு குறிப்பிட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.