பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த 39வயதுடைய இமானுவல் மக்ரான் வெற்றி பெற்றுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குபதிவில் போட்டியிட்ட 11 வேட்பாளர்களில் லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரோன் அவர்களும், தீவிர வலதுசாரி தேசியவாத தலைவர் மரின் லுக் பென் அவர்களும் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.இன்று இறுதி சுற்றுக்கான தேர்தல் வாக்குபதிவு நடைபெற்றது இதில் லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரோன் 65.5 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சோசலிஸ்ட் கட்சியியிருந்து விலகி லிபரல் சென்டிரிஸ்ட் என்ற கட்சியை ஒரு வருடத்திற்கு முன் ஆரம்பித்திருந்தார்.
இதேவேளை இவரின் மனைவி ஒரு ஆசிரியை இவரைவிடவும் 25வயது மூத்தவர் (64) இப் பெண் ஏற்கனவே திருமணமாகி பிள்ளைகள் உள்ளனர் தன் முதல் கணவனைப்பிரிந்தே இவரை 2007இல் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இந்தத் தேர்தலை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வந்தன. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் இமானுவல் மக்ரோன் வெற்றி பெற்றுள்ளார். இவர் வரலாற்றில் பிரான்ஸின் இளையவயதுடைய ஜனாதிபதியவார்.
இத் தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்ட மரின் லுக் பென் 34.5 வாக்குகள் பெற்றுள்ளார்