கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் கீதா குமாரசிங்க காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரின் இடத்துக்கு முன்னாள் அமைச்சர் பியசேன கமகே நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவித்துள்ளன.
கீதா குமாரசிங்க இரட்டை குடியுரிமை வைத்திருப்பதால் அவர் இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து இவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் திணைக்களத்துக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை உடனடியாக நீக்க முடியாது. அவர் மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்புக்கு எதிராக இன்று உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளார். ஆகவே அவர் தனது நியாயங்களை முன்வைப்பதற்குள்ள சட்டரீதியான அவகாசம் இறுதி மணி நேரம் வரை உறுதிசெய்யப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இன்று தெரிவித்துள்ளார்.