வருடாந்த உற்சவ திருவழாவை முன்னிட்டு துவிச்சக்கரவண்டி மற்றும் குடும்பங்களுக்கு தலா ரூபா 10,000 பெறுமதியான உலர் உணவு பொருட்கள் என உதவி தேவைபடும் குடும்பங்களை தெரிவுசெய்து சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்மன் ஆலய நிர்வாகத்தினரால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக பல்லாயிரகணக்கான உதவித்திட்டங்களை செயற்படுத்தியுள்ளார்.
ஒரு ஆலய நிர்வாகம் தாம் வாழும் சழுகக்திற்கு எப்படியான சேவைகளை செய்ய வேண்டும் என்பதை சண்டிலிப்பாய் சீரணி நாக பூசணி அம்மன் ஆலயமும் அதன் நிர்வாகமும் செயற்படுத்தியவிதம் ஏனைய ஆலயங்களும் இவர்களை பின் பற்றி தாமும் முன்னுதாரனமாக அறக்கருமங்கள் செய்ய வேண்டும் என்பதை சுட்டி காட்டுவதாக அமைந்துள்ளது. (வட்டு இந்து வாலிபர் சங்கம்)