Header image alt text

sdfdsfdsதந்தை செல்வாவின் 40ஆம் ஆண்டு நினைவுதினம் அகில இலங்கை தந்தை செல்வா அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்றது.

இந்நினைவு தின நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், தந்தை செல்வா அகில இலங்கை சமூக அபிவிருத்தி மன்றத்தினர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு தந்தை செல்வாவின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டன. அத்துடன் நினைவுப் பரிசில்களும், முதியோர்க்கு சக்கர நாற்காலி, ஊன்றுகோல்கள் மற்றும் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன. Read more

ssஇந்திய பிரதமரின் மலையக விஜயத்தை முன்னிட்டு ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் பரிட்சார்த்த நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய உலங்கு வானூர்தியினால் ஐந்து வீடுகள் சேதமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்பட்டுள்ளது.

எதிர்வரும் 12ம் திகதி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தை திறத்து வைக்க இந்திய பிரதமரின் வருகையை முன்னிட்டு நேற்று இடம்பெற்றது. இந்திய உலங்கு வானூர்தியினால் இரண்டு பரிட்சார்த்த நடவடிக்கையின் போதே டன்பார் மைதானத்தை சுற்றியுள்ள குடியிருப்புகள் 5இன் கூரைகள் சேதமாகியுள்ளதாக குடியிருப்பாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். Read more

p1புலம்பெயர் உறவான ஜேர்மன் நாட்டை சேர்ந்த இரு சகோதர உறவுகளான லதீஸ் லவீதா ஆகிய சகோதரர்கள் தங்களது பேரன் பேத்திகள் மற்றும் யுத்தத்தினால் தாய் தந்தையை இழந்தவர்கள் எல்லோரின் ஆத்ம சாந்தி வேண்டி

சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மிகவும் வறுமை கோட்டிற்கு உட்பட்ட 15 குடும்பங்களைத் தெரிவு செய்து குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி பொதிகளை அன்பளிப்பாக வழங்கி தங்களது தர்ம காரியத்தை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக அதன் தலைமை காரியாலயத்தில் வைத்து நாடாத்தியுள்ளார்கள். Read more

jailவெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். பௌத்தர்களின் பிரதான சமய விழாக்களில் ஒன்றான வெசாக் பௌர்ணமி தினத்தை ஒட்டி, பொது மன்னிப்பு அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

சுமார் 575 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு அபராதம் செலுத்த முடியாது தண்டனை அனுபவிப்போர் வயது முதிர்ந்த கைதிகள் உள்ளிட்டவர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

asமாலைதீவின் மூன்றாவது உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாலைதீவு ஜனநாயக கட்சி அமோக வெற்றிப்பெற்றுள்ளது. மூன்று முக்கிய நகர சபைகள் உள்ளிட்ட உள்ளுராட்சி மன்றங்களில் வெற்றிப் பெற்று ஜனநாயகக் கட்சி, ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

கடந்த சனிக்கிழமை மாலைதீவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றது. மாலைதீவின் ஜனநாயகக் கட்சி அந் நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

sdsdfவளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் பல அதிநவீன யுக்திகளை பயன்படுத்தி செவ்வாய் கிரகம் அல்லது நிலாவில் விவசாயம் செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. அரிஜோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், நாசா விஞ்ஞானிகளும் இணைந்து செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்யும் ஆராய்ச்சியை மேற்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளனர். அதற்கான சூழ்நிலைகள் மற்றும் சாத்திய கூறுகள் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

பூமியை போன்று விவசாயம் செய்வதற்கு ஏற்ற தகவமைப்புகள் செவ்வாய் கிரகத்தில் இருப்பதாக கூறும் நாசா விஞ்ஞானிகள் அங்கு விவசாயம் செய்வதன் மூலம் ஒரு வருடத்துக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்றும் கூறுகின்றனர். ஏற்கனவே பசுமைகுடில் தொழில்நுட்பம் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. Read more