ssஇந்திய பிரதமரின் மலையக விஜயத்தை முன்னிட்டு ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் பரிட்சார்த்த நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய உலங்கு வானூர்தியினால் ஐந்து வீடுகள் சேதமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்பட்டுள்ளது.

எதிர்வரும் 12ம் திகதி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தை திறத்து வைக்க இந்திய பிரதமரின் வருகையை முன்னிட்டு நேற்று இடம்பெற்றது. இந்திய உலங்கு வானூர்தியினால் இரண்டு பரிட்சார்த்த நடவடிக்கையின் போதே டன்பார் மைதானத்தை சுற்றியுள்ள குடியிருப்புகள் 5இன் கூரைகள் சேதமாகியுள்ளதாக குடியிருப்பாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். அதிக வலுவுடையை குறித்த உலங்கு வானூர்தியின் விசிறியின் அதிக காற்று வீசியதாலே குடியிருப்பின் கூரைப் பகுதிகள் காற்றில் அள்ளுண்டுள்ளன. பரிட்சார்த்த நடவடிக்கையின் போது யாழ்ப்பாணத்தின் இந்திய உதவித் தூதுவர் ஆர். நடராஜன் உள்ளிட்ட இந்திய அதிகாரிகள் உட்பட அமைச்சர் வே.இராதாகிருஸ்னன் மாகாணசபை உறுப்பினர்களான சே.ஸ்ரீதரன். குணபதி கனகராஜ், ஆர் ராஜாராம் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.