மாலைதீவின் மூன்றாவது உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாலைதீவு ஜனநாயக கட்சி அமோக வெற்றிப்பெற்றுள்ளது. மூன்று முக்கிய நகர சபைகள் உள்ளிட்ட உள்ளுராட்சி மன்றங்களில் வெற்றிப் பெற்று ஜனநாயகக் கட்சி, ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
கடந்த சனிக்கிழமை மாலைதீவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றது. மாலைதீவின் ஜனநாயகக் கட்சி அந் நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.