வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். பௌத்தர்களின் பிரதான சமய விழாக்களில் ஒன்றான வெசாக் பௌர்ணமி தினத்தை ஒட்டி, பொது மன்னிப்பு அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
சுமார் 575 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு அபராதம் செலுத்த முடியாது தண்டனை அனுபவிப்போர் வயது முதிர்ந்த கைதிகள் உள்ளிட்டவர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.