இந்திரராசா குடும்பத்தினருடைய இரண்டாவது இறுவெட்டு வெளியீட்டு விழா வட்டுவாகல் சப்தகன்னியர் கோவில் முன்றலில் வெட்டுவாய்க்கால் பாடசாலை மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமானது.
இந்நிகழ்வை முள்ளியவளை கலைமகள் வித்தியாலய அதிபர் திரு கமலகாந்தன் தலைமை ஏற்று நடத்தினார் ஆரம்ப உரை சேதுபதியினால் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மகாணசபை உறுப்பினர்கள் கந்தையா சிவநேசன் மற்றும் து.ரவிகரன், வன்னிமேம்பாட்டு பேரவை தலைவர் தவராசா, பூசகர் விநாயகமூர்த்தி, சப்தகன்னியர் கோவில் பூசகர் மற்றும் பிரம்ம குமாரிகள் ராஜயோக நிலையத்தின் தலைவர்கள் மற்றும் திருமதி சாந்தி கமலகாந்தன் கலாச்சார பேரவை முல்லைத்தீவு மற்றும் கிராம மக்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக வன்னி மேம்பாட்டுப் பேரவையால் திரு இந்திரராசா அவர்களுக்கு ”ஆசுகவி” என்னும் பட்டம் வழங்கப்பட்டது. அதற்கான சான்றிதழை கௌரவ வடமாகாணசபை உறுப்பினர் திரு கந்தையா சிவநேசன் அவர்கள் வழங்கிவைத்தார்.