ssகிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் நேற்று திடீரென ஏற்பட்ட சுழல் காற்று மழையால் மக்களின் வீட்டுக் கூரைகள் தூக்கி வீசப்பட்டு 4 நிரந்தர வீடுகளும் 6 தற்காலிக வீடுகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன.

நேற்று மாலை கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் திடீரென சுழல் காற்றுடன் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் மக்களது வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுக் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. அந்தப் பகுதியில் உள்ள வாழை, பப்பாசி போன்ற பயன் தரு மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன. பாரிய சுழல் காற்றுடன் மழை பெய்தவேளை வீட்டுக் கூரைகள் தூக்கி வீசப்பட்டபோது வீடுகளில் வசித்தவர்கள் குழந்தைகள் சிறுவர்களுடன் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றமையால் பாரிய காயங்கள், உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

எனினும் சிலருக்கு கூரைத் தகரம் வெட்டிச் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. மழையுடன் சுழல் காற்றும் இடி மின்னல் தாக்கங்களும் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்களால் தெரிவிக்கப்படுகின்றது.