us_meet_north_cmஅமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அத்துல் கேஷ;hப் மற்றும் அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆகியோர் இன்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை, சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, அமெரிக்க குழுவினர் இங்குள்ள நிலமைகள் குறித்து கேட்டறிந்து கொண்டதாக, வடக்கு முதல்வர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,நாம் சில விடயங்களை கூறினோம். 

அதாவது 2015.01.08ம் மக்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்புக்களுக்கு மாறாக எல்லாம் மிக மந்த கதியில் நடந்து வருவதால் மக்கள் விசனமடைந்திருக்கின்றனர். மக்கள் விசனமடைய காரணம் அரசாங்கம் துணிந்து தீர்மானங்களை எடுக்காமையே ஆகும்.


விசனமடைந்த மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்திவருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை வெளிப்படுத்து, காணிகளை விடுவி, வேலை வாய்ப்பை வழங்கு என போராட்டங்கள் நடக்கிறது, 

என கூறியிருந்தேன்.

இந்நிலையில் இவ்வாறான பிரச்சினைகளுக்கு அமெரிக்கா என்ன செய்யலாம்? எனக் கேட்டார்கள்.

அதற்கு நான் கூறியுள்ளேன் இலங்கை இரண்டு வருடங்கள் கால அவகாசத்தை கேட்டிருக்கிறது. இந்த காலத்திற்குள், இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும், என தாம் கேட்டுள்ளதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.