முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்றுகாலை 9.30 மணியளவில் முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது. இதன்போது யுத்தத்தில் உயிரிழந்தோர்க்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனை, மலரஞ்சலி செலுத்துதல், தீபமேற்றுதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நினைவு தினத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், ஈ.சரவணபவன், சிவசக்தி ஆனந்தன், எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன், வட மாகாணசபை அமைச்சர்கள் குருகுலராஜா, வைத்தியக்கலாநிதி சத்தியலிங்கம், பா.கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம், க.சிவநேசன், பரஞ்சோதி, ஜி.ரி.லிங்கநாதன், து.ரவிகரன் உள்ளிட்ட வட மாகாணசபை உறுப்பினர்களும், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதப் பெரியார்கள் மற்றும் பெருந்தொகையான பொதுமக்களும், கலந்துகொண்டிருந்தனர்.