வவுனியா திருநாவற்குளம் உமாமகேசுவரன் முன்பள்ளியின் புதுவருட பாரம்பரிய நிகழ்வுகள் முன்பள்ளியின் அதிபர் திருமதி மீரா குணசீலன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகரபிதா திரு.க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
சிறப்பு அதிதியாக வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், தமிழ் தேசிய இளைஞர் கழக அமைப்பாளர் திரு.வ.பிரதீபன் மற்றும் உறுப்பினர் ரவி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.