
பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் இன்று இருக்கக்கூடிய அரசியல் அமைப்பு மாற்றம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை பலப்படுத்த வேண்டியதன் அவசியம் என்பன குறித்து பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்கள் விளக்கிக் கூறியதோடு, இவை தொடர்பிலான கருத்துப் பரிமாறல்களும் இடம்பெற்றன.