இன்று எமது புலம்பெயர் உறவான ஜேர்மன் நாட்டை சேர்ந்த மு.பரமேஸ்வரி அவர்களால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக புன்னை நீராவியடியை சேர்ந்த சந்திரன் அஜித்குமார் என்பவரின் பிள்ளைகளின் கற்றல் செயற்ப்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக புதிய துவிசக்கரவண்டி ஒன்றை அன்பளிப்பு செய்து வைத்துள்ளார்.
சந்திரன் அஜித்குமார் நடந்து முடிந்த இறுதி யுத்தத்தின் போது இரு கைளையும் மணிக்கட்டுடன் இழந்துள்ளதுடன் ஒரு கண்ணும் முற்றாக பார்வையிழந்துள்ளார் இவர் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் விடுத்த விண்ணப்பத்தில் தமது ழூன்று பிள்ளைகளும் கல்வி கற்று வருவதாகவும் துவிசக்கரவண்டி இல்லாது இவர்களின் கற்றல் செயற்பாட்டை தொடர்வதில் பல இடர்கள் உள்ளதாகவும் தமக்கு ஒரு துவிசக்கரவண்டி அன்பளிப்பாக தரும் பட்சத்தில் தமது பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டை ஊக்குவிப்பதாக அமையும் என்று குறிப்பிட்டிருந்தார்.
கருணை உள்ளம் கொண்ட ஜேர்மன் நாட்டில் வசிக்கும் எமது உறவான மு.பரமேஸ்வரி அவர்கள் அவர்களின் கற்றல் செயற்பாட்டை கருத்தில் கொண்டு வட்டுக்கோட்டை இந்து வலிபர் சங்கத்தின் ஊடாக இன்று புதிய துவிசக்கரவண்டி ஒன்றை வழங்கி வைத்துள்ளதை முன்னிட்டு அவருக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் பயனாளியின் குடும்பம் சார்பாகவும் நன்றிகளை கூறிக்கொள்கின்றோம்.