londonமான்செஸ்டர் தாக்குதல் குறித்து பிரிட்டன் காவல்துறை தம்மிடம் பகிர்ந்த புலனாய்வுத் தகவல்களை அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் ஊடகங்களில் கசியவிட்டதாக கருதும் பிரிட்டன் காவல்துறை இந்த புலனாய்வுத் தகவல்களை அமெரிக்காவுடன் பகிர்வதை பிரிட்டன் காவல்துறை நிறுத்திவிட்டதாக தெரியவந்திருக்கிறது.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் குண்டுவெடிப்பு தொடர்பான பிரிட்டன் காவல்துறையின் வெளியிடப்படாத புகைப்படங்கள் வெளியானதால் பிரிட்டன் அதிகாரிகளும் அரசியல் தலைமைகளும் கோபமடைந்துள்ளனர்.குழந்தைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டு, 64 பேர் காயமடைந்த மான்ச்செஸ்டர் தாக்குதல் நடந்த சில மணி நேரத்தில் வெடிகுண்டு தாக்குதலுக்கு காரணம் சல்மான் அபேடி என்று அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியானது.

நேட்டோ நாடுகளின் கூட்டத்தில், இதுகுறித்த தனது கவலையை பிரிட்டன் பிரதமர் தெரீசா மே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் நேரில் தெரிவித்தார்