யாழ். தெல்லிப்பழை சித்தியம்புளியடி கலைச்செல்வி சனசமூக நிலையம் நடாத்திய கலைச்செல்வி முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-2017 கலைச்செல்வி நூல் நிலையத்தின் அருகாமையில் இன்று (26.05.2017) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00மணியளவில் கலைச்செல்வி சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. சி.அனுசன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு. சோ.சுகிர்தன் (முன்னாள் தவிசாளர், வலி வடக்கு பிரதேசசபை), திரு. நா.கணேசன் (தலைவர், பனைதென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம், தெல்லிப்பழை) ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக திருமதி. த.வாசுகி (அதிபர், AH/கட்டுவன்புலம் மகாவித்தியாலயம், தெல்லிப்பழை), திருமதி. நி.ஜொய்சி (கிராம சேவையாளர், J/227 தெல்லிப்பழை கிழக்கு) ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
ஆரம்ப நிகழ்வுகளாக மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், கொடியேற்றல், ஒலிம்பிக் தீபம் ஏற்றல், வரவேற்புரை என்பன இடம்பெற்றதைத் தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து தலைமையுரை, விருந்தினர்கள் உரைகள் இடம்பெற்று இறுதியில் முன்பள்ளிச் சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.