இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்க அண்டை நாடுகளின் உதவியை இலங்கை கோரியிருந்த நிலையில், உடனடியாக இந்திய அரசு நிவாரணப் பொருட்களுடன் கப்பல் ஒன்றை இலங்கைக்கு அனுப்பியுள்ளது.
இந்த தகவலை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஆணையர் இன்று அறிவித்துள்ளார். மேலும், நிவாரணப் பொருட்களுடன் மற்றொரு கப்பல் ஞாயிறன்று இலங்கைக்கு வந்து சேரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சீரற்ற கால நிலை தொடரும் நிலையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி மரணமடைந்த மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.