வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான இளைஞர் தின நிகழ்வுகள் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் சுந்தரலிங்கம் காண்டீபன் தலைமையில் இன்றைய தினம் (27.05.2017) வவுனியா சிங்கள பிரதேச செயலக மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. 
“சுத்தமான இலங்கைக்கு இளைஞர்களின் குரல்” எனும் தொனிப் பொருளில் வவுனியா, செட்டிகுளம், நெடுங்கேணி, வவுனியா தெற்கு ஆகிய பிரதேசங்களிலிருந்து  இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Read more