outh17எமது புலம்பெயர் உறவான சுவிஸ் நாட்டை சேர்ந்த தவராஜா புவனேந்திரன் அவர்களால் 25.5.2017 அன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த கால யுத்தத்தினால் காணாமல் ஆக்கபட்ட குடும்பத்தை சேர்ந்த 2குடும்பத்திற்க்கும் அங்கவீனம் ஆக்கபட்ட குடும்பத்தை சேர்ந்த ஒரு குடும்பத்திற்குமாக மொத்தமாக 3 புதியதுவிசக்கரவண்டிகள் அவர்களின் பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டுக்காக பாதிக்கபட்ட குடும்பங்களின் வேண்டுகோளுக்கமைய அன்பளிப்பளிப்பு செய்யபட்டுள்ளதுடன்வள்ளிபுணம் இடைக்காடு வீதியைமுகவரியாக கொண்ட பெண் தலைமைதுவ குடும்பமான கைலாசபிள்ளை சரஸ்வதிக்கு ரூபா 10000 பெறுமதியானஉலர் உணவு பொருட்களும் அன்பளிப்பாகவழங்கபட்டுள்ளன.

துவிசக்கரவண்டி உதவி கோரிய குடும்பங்களின் பெற்றோர்கள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம்விடுத்த விண்ணப்பத்தில் தெரிவித்ததிற்க்கு அமைவாக கரிப்;பட்ட முறிப்பு மாங்குளம் முகவரியாகக் கொண்ட முள்ளியவளை வத்தியானந்தா கல்லூரியில் கல்வி கற்க்கும் மாணவியான மகேஸ்வரன் லச்சனாவுக்கும் (கடந்தகாலயுத்தத்தின் போது ஒரு சகோதரர் காணமல் ஆக்கபடடுள்ளார்)

புதியகொலனி மாங்குளத்தை முகவரியாக கொண்டு மாங்குளம் மகா வித்தியாலத்தில் கல்வி கற்க்கும் மாணவன் நாகேந்திரம் பிருந்தன் (கடந்தகால யுத்தத்தின்போத இருசகோதரர்கள் காணாமல் ஆக்கபட்டுள்ளனர்)

மூங்கிலாறு உடையார்கட்டை முகவரியாக கொண்டு உடையார்கட்டு மகாவித்தியாலத்தில் கல்வி கற்க்கும் மாணவி கருணகிரிநாதன் கலையரசி (கடந்தகாலயுத்தத்தின் போது இவரது தந்தை ஒரு காலை தொடைப்பகுதியுடன் இழந்துள்ளார்) ஆகிய மாணவர்களுக்கு இவ் துவிசக்கரவண்டிகள் கற்றல் செயற்பாட்டுக்காக அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளது.

z5z3z2z4outh17