வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் கொழும்புக் கிளையின் ஸ்தாபகத் தலைவரும் சமூக சேவையாளரும் இலங்கை வங்கி வெள்ளவத்தை கிளையின் முன்னாள் முகாமையாளருமான என்.பாலராமன் காலமானார்.
சுகவீனமுற்றிருந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி தனது 71 வது வயதில் காலமாகியுள்ளார்.
பல்வேறு சமய, சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த இவர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பல்வேறு உதவிகளை வழங்கிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரது பூதவுடல் வெள்ளவத்தை , ஈ.ஏ.கூரே மாவத்தையிலுள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிகிரியைகள் வியாழக்கிழமை நடைபெறும்.