May 17
30
Posted by plotenewseditor on 30 May 2017
Posted in செய்திகள்
நேற்று முன்தினம் கொழும்பில் காலமான பிரபல சட்டத்தரணியும், மனித உரிமைவாதியும், தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களின் இறுதி நிகழ்வுகள் இன்று யாழ். கொக்குவிலில் இடம்பெற்றது. அவரது பூதவுடல் கொழும்பு ஜெயரட்ண மலர்ச்சாலையில் நேற்றையதினம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நேற்று மாலை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி எடுத்துவரப்பட்டது. இன்று (30.05.2017) செவ்வாய்க்கிழமை காலை 7மணிமுதல் 8.30வரை சாவகச்சேரியில் அவரது பூதவுடல் அப்பிரதேச மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அங்கிருந்து கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
Read more
May 17
30
Posted by plotenewseditor on 30 May 2017
Posted in செய்திகள்
சுன்னாகம், கந்ததோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கு பூமாதேவி மகாதேவா ஞாபகார்த்த நினைவு மண்டபம் ஒன்று 25அடி அகலத்திலும் 60அடி நீளத்திலும் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று (29.05.2017) திங்கட்கிழமை காலை 9.30மணியளவில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் அதிபர் மு.செல்வஸ்தான் தலைமையில் நடைபெற்றது. முதலாவது அடிக்கல்லினை நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்த ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் பழைய மாணவரும், புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் நாட்டிவைத்தார். தொடர்ந்து ஸ்கந்தா பழைய மாணவர் தாய்ச் சங்கத்தின் முன்னாள் செயலாளர்களான சி.ஹரிகரன், த.தேவராஜன், சி.கஜன் மற்றும் சுன்னாகம் லயன்ஸ் கழகத் தலைவர் ந.தயாரூபன் மற்றும் சோதி மார்க்கண்டு ஆகியோர் நாட்டிவைத்தனர்
Read more