P1430926சுன்னாகம், கந்ததோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கு பூமாதேவி மகாதேவா ஞாபகார்த்த நினைவு மண்டபம் ஒன்று 25அடி அகலத்திலும் 60அடி நீளத்திலும் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று (29.05.2017) திங்கட்கிழமை காலை 9.30மணியளவில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் அதிபர் மு.செல்வஸ்தான் தலைமையில் நடைபெற்றது. முதலாவது அடிக்கல்லினை நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்த ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் பழைய மாணவரும், புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் நாட்டிவைத்தார். தொடர்ந்து ஸ்கந்தா பழைய மாணவர் தாய்ச் சங்கத்தின் முன்னாள் செயலாளர்களான சி.ஹரிகரன்,  த.தேவராஜன், சி.கஜன் மற்றும் சுன்னாகம் லயன்ஸ் கழகத் தலைவர் ந.தயாரூபன் மற்றும் சோதி மார்க்கண்டு ஆகியோர் நாட்டிவைத்தனர்

வாழ்த்துரைகளை நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சுன்னாகம் லயன்ஸ் கழக செயலாளர் சி.ஹரிகரனும் வழங்கினார்கள். இந்த மண்டபம் பூமாதேவி மகாதேவா அம்மையார் மறைந்து ஓராண்டு நினைவு நிறைவில் திறக்கப்படுமு; என்றும் இந்த மண்டபத்துக்குரிய இருக்கைகள் மற்றும் தளபாடங்களை தாமே வழங்குவதாகவும் செ.மகாதேவா இதன்போது தெரிவித்தார். அத்துடன் சுன்னாகம் லயன்ஸ் கழகத்தின் பொருளாளர் செ.மகாதேவாவினதும் அவரது புதல்வர் ம.பிரிதுவிராஜாவினதும் நிதிப்பங்களிப்பில் இந்த மண்டபம் அமைக்கப்படவுள்ளது. அம்மையார் கடந்த இரு மாதங்களுக்கு முன்னரே இயற்கை எய்தினார். அவரது ஞாபகார்த்தமாக அவரது குடும்டபத்தினரால் இந்த மண்டபம் அமைக்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

P1430909P1430912P1430913P1430916P1430917P1430918P1430919P1430921P1430924P1430925P1430926P1430935P1430947P1430949P1430931P1430934P1430936P1430939P1430940P1430941