நல்லூர் பிரதேச இளைஞர் விளையாட்டு விழா-2017 நிகழ்வானது 29.05.2017 திங்கட்கிழமை மாலை 6.30மணியளவில் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய மைதானத்தில் நல்லூர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் திரு.ச.ஜெகதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர்கள் அ.பரஞ்சோதி, இ.ஆனோல்ட் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களகாக பேராசிரியர் சு.மோகனதாஸ்(முன்னாள் துணைவேந்தர் யாழ். பல்கலைக்கழகம், ஐ.தவேந்திரன்(உதவிப் பணிப்பாளர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் யாழ்ப்பாணம்) ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
ஆரம்ப நிகழ்வுகளாக மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், கொடியேற்றம், இளைஞர் சத்தியப்பிரமாணம் என்பன இடம்பெற்றதைத் தொடர்ந்து வலைப்பந்தாட்ட இறுதிச்சுற்று ஆண்-பெண், கரப்பந்தாட்ட இறுதிச்சுற்று ஆண் மற்றும் கயிறு இழுத்தல் (நல்லூர் Vs உடுவில்) என்பன இடம்பெற்றன.
தொடர்ந்து வரவேற்புரை, தலைமையுரை, பிரதம விருந்தினர் உரை என்பன இடம்பெற்றன. இதனையடுத்து பரிசில்களை வழங்கிவைக்கும் நிகழ்வு இடம்பெற்று நன்றியுரையுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுபெற்றன.