ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆகிய மூன்று விடயங்களின் அடிப்படையில் அரசாங்கம் முன்னோக்கி சென்று கொண்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடனான சந்திப்பின் போதே நிதி மற்றும் ,ஊடகத்துறைஅமைச்சர் மங்கள சமரவீர இந்த விடங்களை குறிப்பிட்டார். இன, மத, கட்சி வேறுபாடு இன்றி இந்த வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தான் அனைத்து அரச மற்றும் தனியார் ஊடகங்களிடம் கேட்டுக்கொள்வதாக அமைச்சர் கூறினார்.
நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், அனைத்து மக்களினதும் கருத்துக்களை உள்வாங்கி செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும், பிரிவினை ஊடாக நாடு முன்னோக்கிச் செல்ல முடியாதென்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டை வளமிக்க அபிவிருத்திகொண்ட நாடாக மேம்படுத்துவதற்காக சமகால நல்லாட்சி அரசங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது தெற்கில் சில சிங்கள கடும்போக்காளர்கள் இதனை சீர்குலைக்கப் பார்க்கின்றனர்.
பொது மக்களுக்கு உண்மையை ஊடகங்கள் கூற வேண்டும். பூகோள ரீதியிலான நன்மைகளைப் பயன்படுத்தி நாட்டை மேம்படுத்த வேண்டும். ஊடகங்களும் இதற்கு உதவ வேண்டும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.