well03இன்று முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட பிரதான வீதி வள்ளிபுனம் முகவரியாக கொண்ட வி.ரஜனிதேவி என்பவருக்கு லண்டனைச் சேர்ந்த அண்ணாமலை கிருபாகரன் (ரூபா 88 000) மற்றும் கனடாவைச் சேர்ந்த ஆருசன் மிருசன் ஆகிய சகோதரர்கள் (ரூபா 57 000)  தமது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கிய நிதியில் இருந்தும் பயனாளியின் பங்களிப்பாக 500 சீமெந்து கற்றகளுடன் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் ரூபா 141,000 செலவில் புதிய கிணறு கட்டப்பட்டு பயனாளியின் பாவனைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.மேற்படி விண்ணப்பதாரி வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திற்கு விடுத்த வேண்டுகோளில் தெரிவித்ததாவது முல்லைத்தீவில் 2009 ஆண்டு நடந்து முடிந்த இறுதி யுத்தத்தின் போது எறிகனை தாக்குதலில் தனது கணவர் கண்ணில் காயமடைந்து இரு கண்களும் முற்றாக பார்வையிழந்துள்ள நிலையில் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வருவதாகவும் தனது மூத்த மகன் உயர்தர பிரிவில் கல்வி கற்று வந்தவர் குடும்ப கஸ்ட நிலை காரணமாக படிப்பை நிறுத்தி வேலைக்கு சென்று வருவதாகவும் தங்களின் அடிப்படை வசதியான கிணறு இல்லாமையினால் தாங்கள் அயல் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளதால்; பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும்  வெட்டப்பட்ட மண் கிணறு தூர்வையாகி போவதாகவும் கட்டிமுடிப்பதற்கு பண வசதியின்மை உள்ளதாகவும் இவ் வருடத்துக்குள் கட்டி முடிக்காவிட்டால் முற்றாக கிணறு தூர்வையாகி விடும் ஆகையால் இவ் வருட முடிவுக்குள் தமது அடிப்படை வசதியான கிணற்றை மனிதாபிமான ரீதியாக கட்டி தருமாறு தெரிவித்திருந்தார்.

யுத்தத்தினால் பாதிக்கபட்ட இக் குடும்பத்தின் மனிதாபிமான வேண்டுகோளை ஏற்று கிணறு அமைத்து கொடுப்பதற்கு நிதி அனுசரனை செய்துள்ள லண்டனைச் சேர்ந்த அண்ணாமலை கிருபாகரன் மற்றும் கனடாவைச் சேர்ந்த சகோதரர்களான ஆருசன் மிருசன் ஆகியோருக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் பயனாளியின் குடும்பம் சார்பாகவும் நன்றிகளை கூறிக்கொள்ளும் தருணம் இவ் மனிதபிமான உள்ளம் கொண்டவர்கள் நோய்நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ   இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

well03

well01 well02 well04