siva[1]தியாகி உரும்பிராய் பொன்.சிவகுமாரனின் 43ஆம் வருட நினைவுதினம் இன்றாகும். அன்னாரின் நினைவுதின நிகழ்வு உரும்பிராயில் அமைந்துள்ள அவரது நினைவுத் தூபிக்கு அருகாமையில் இன்றுகாலை 9.30மணியளவில் நடைபெற்றது. 
இதன்போது நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அன்னாரின் உருவப்படத்திற்கும், உருவச் சிலைக்கும் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன், தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் பொதுச்செயலர் தி.சிறீதரன் (சுகு), வட மாகாணசபை உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், அனந்தி சசிதரன், பரஞ்சோதி, வட மாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் தவராஜா, டான் ரிவி இயக்குநர் குகநாதன் ஆகியோரும் சிவகுமாரன் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர்ப் பெரியோர்களும் கலந்துகொண்டிருந்தனர். 

பொன்.சிவகுமாரன் தமிழ் மக்களின் விடிவிற்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப ஹர்த்தாக்களில் ஒருவராவார். பொன்.சிவகுமாரான் தமிழ் மக்கள் மத்தியில் அன்பையும், மதிப்பினையும் பெருமளவில் பெற்றிருந்தார். இலங்கை போராட்ட வரலாற்றில் தமிழ் மக்களின் விடிவிற்காக முதன்முறையாக தம் இன்னுயிரைத் தியாகம் செய்து ஒரு வரலாறினை இவர் படைத்தார். 1950ம் ஆண்டு ஜூன்மாதம் 26ம் திகதி பிறந்த இவர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரின் முன்னாள் மாணவராவார். 1974ம் ஆண்டு ஜூன் 5ம்திகதி பொலீசாரின் சுற்றிவளைப்பின்போது பொன். சிவகுமாரன் அவர்கள் அவர்களிடம் அகப்படாமல் தன்னுயிரை தியாகம் செய்தார். 
sivakumaram01 sivakumaram02 sivakumaram03 sivakumaram04 sivakumaram05 sivakumaram06 sivakumaram07 sivakumaram08 sivakumaram09 sivakumaram10 sivakumaram11 sivakumaram12 sivakumaram13 sivakumaram14 sivakumaram15 sivakumaram16 sivakumaram17 sivakumaram18 sivakumaram19 sivakumaram20 sivakumaram22 sivakumaram23 sivakumaram24 sivakumaram25 sivakumaram26 sivakumaram28 sivakumaram29