iranஇரானின் தலைநகர் தெஹ்ரானில் நடந்த இரு தாக்குதல்களில் பன்னிரெண்டு பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. நாடாளுமன்றத்திலும், இரானின் இஸ்லாமிய குடியரசின் நிறுவனரின் சமாதியிலும் தாக்குதல் நடந்துள்ளது.

பெண் வேடமணிந்த ஆயுததாரிகள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து சுட்டிருக்கிறார்கள். ஒரு தாக்குதலாளி தனது வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்ததாக இரான் கூறியுள்ளது.

நான்கு பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதாக இரானிய ஊடகங்கள் கூறுகின்றன. கட்டிடம் சூழப்பட்டு, மூடப்பட்டுள்ளது.

இரண்டாவது தாக்குதல் சிறிது நேரத்தில் நவீன இரானின் நிறுவனர், அயதொல்லா கொமெனியின் சமாதியில் நடந்தது. துப்பாக்கியால் ஒருவரையாவது சுட்டுக்கொன்ற ஒரு தாக்குதலாளி, குண்டை வெடிக்கச் செய்ததாக நம்பப்படுகின்றது. இந்த தாக்குதலின் பின்னணியில் ஐ எஸ் இருப்பதாக தெரிகிறது.