kathar01சௌதி அரேபியா உட்பட மத்திய கிழக்கின் ஆறு நாடுகள் கத்தாருடன் முரண்பட்டுள்ளமை அங்கு பணி புரியும் இலங்கையருக்கும், கத்தார்-இலங்கைக்கு இடையிலான ராஜிய உறவுகளுக்கும் தொடர்புடைய விஷயமல்ல என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கத்தார் ரியலை இலங்கை நாணயமாக மாற்றும் நடவடிக்கைகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என்றும்.சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், பஹ்ரைன் மற்றும் எகிப்து, லிபியா, ஏமன் ஆகிய நாடுகள் கத்தாருடனான ராஜிய உறவுகளை முறித்துக்கொள்வதாக அறிவித்ததையடுத்து, அப்பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.

கத்தாருக்கான தரை மற்றும் கடல் வழி போக்குவரத்துக்களை இந்நாடுகள் நிறுத்தியுள்ள நிலையில், எகிப்து வான் வழி போக்குவரத்துக்களையும் நிறுத்தியுள்ளது.

கத்தாரில் இலங்கையர் சுமார் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் பேர் பணி புரிந்து வருவதுடன், தற்போதை நிலைமை அவர்களுடன் நேரடி தொடர்புடையவை அல்ல வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

அத்தோடு இலங்கை கத்தாருக்கிடையிலான விமான சேவையும் வழக்கம் போல் நடைபெறுவதாக அமைச்சம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்திய பெருங்கடலில் இருக்கும் தீவான மாலத்தீவு கத்தாருடனான தனது ராஜீய உறவைத் துண்டிக்கும் ஏழாவது நாடாகியுள்ளது. கத்தாருடனான ராஜீய உறவுகள் மட்டுமே துண்டிக்கப்படும் எனவும், வர்த்தக உறவுகள் தொடரும் எனவும் மாலத்தீவு தெரிவித்துள்ளது.

இரான் பற்றி அமெரிக்க அமெரிக்கா கொண்டிருக்கும் குரோதத்தன்மையை விமர்சித்து கத்தார் நாட்டின் அரசர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்-தானி தெரிவித்த கருத்துகளை மேற்கோள் காட்டி வந்த ஒரு சர்ச்சைக்குள்ளான செய்தியால் இந்த தற்போதைய நெருக்கடி தூண்டப்பட்டது.

கணினி வலையமைப்பில் ஊடுருவியவர்கள்தான் தனது அரச செய்தி நிறுவனத்தில் வெளியிடப்பட்ட செய்திக்குப் பின் இருக்கிறார்கள் என்று கத்தார் கூறியது.
 
தீவிரவாதம், கடும்போக்குவாதம் மற்றும் பிளவுகளை ஏற்படுத்தும் அமைப்புகளை ஆதரிப்பது, நிதி ஆதரவளிப்பது மற்றும் அவற்றின் கொள்கைகளை தழுவி கொள்வதாக  கத்தார் மீது குற்றஞ்சாட்டியுள்ளதாக தெரியவருகிறது.
 
அமெரிக்காவுக்கு நெருங்கிய நட்பு நாடுகளாகவும் இருக்கும் சக்தி மிக்க வளைகுடா நாடுகளுக்கு இடையில், முக்கியமான பிளவாக இந்த எதிர்பாராத திடீர் நடவடிக்கை பார்க்கப்படுகிறது.a