வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் இன்று காலை 10.15 மணியளவில் தனியார் மற்றும் இ.போ.ச ஊழியர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,வவுனியா முதலாம் குறுக்கு வீதியில் தனியார் பஸ்ஸில் பயணிகளை ஏற்றுவதற்கும் வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் இ.போ.ச பஸ்ஸில் பயணிகளை ஏற்றுவதற்கும் இரு தரப்பினருக்கும் இடையில் மத்திய பஸ் நிலையத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் இ.போ.ச ஊழியரும், தனியார் பஸ்ஸின் ஊழியரும் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.