பிரித்தானியாவில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தொங்கு நாடாளுமன்றம் உருவாகியிருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது பற்றி, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடத்தவிருக்கும் பிரெக்ஸிட் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக தனது பெரும்பான்மையை அதிகரித்துக்கொள்ள தேர்தலை முன்கூட்டியே நடத்த உத்தரவிட்ட , பிரதமர் தெரீசா மே அவர் முயற்சியில் தோல்வியடைந்தார்.ஆளும் கன்சர்வேடிவ் கட்சி, தொகுதிகள் பலவற்றை இழந்திருக்கிறது, எதிர்பாராத விதமாக தொழிற்கட்சி பல இடங்களை வென்றிருக்கிறது. கடந்த தேர்தலை விட வாக்குப்பதிவு இந்த தேர்தலில் அதிகமாக இருந்தது
எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் வட அயர்லாந்தை சேர்ந்த ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியுடன் கன்சர்வேடிவ் கட்சி அவர் கூட்டணி அமைத்துள்ளது.
இந்த தேர்தல் முடிவுகள் பிரதமர் தெரீசா மே அவர்கட்கு ஒரு பெருத்த அடியாகவும், முக்கிய எதிர்க்கட்சியான தொழில் கட்சிக்கு முன்னேற்றமாகவும் பார்க்கப்படுகின்றது.
ஐக்கிய ராஜ்ஜியத்தில் புதிய அரசை அமைக்கப்போவதாக தெரீசா மே தெரிவித்திருக்கிறார். தன்னுடைய அரசு ‘ஸ்திரத்தன்மையை வழங்குவதோடு’, நாட்டை ‘பாதுகாப்பாகவும் பாத்திரமாகவும்’ வழிநடத்தும் என்று அவர் கூறியுள்ளார். பல ஆண்டுகளாக வலுவான உறவோடு இருந்து வருகின்ற கன்சர்வேட்டிவ் கட்சியும், ஜனநாயக ஒன்றியக் கட்சியும் இணைந்து பணியாற்ற போவதாக தெரீசா மே குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய ராஜ்ஜியத்தை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டிய அனைத்தையும் செய்யப்போவதாக கூறியுள்ளார்.
இந்தத் தேர்தலில் 56 இந்தியர்கள், வேட்பாளர்களாக களம் இறங்கினார்கள். தேர்தலில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியினரில், தொழிலாளர் கட்சியின் சார்பில் ஏழு பேரும், கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் ஐந்து பேரும் வெற்றிப் பெற்றுள்ளனர். முந்தைய நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பத்து பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த முறை அது அதிகரித்துள்ளது.
தேர்தல் முடிவுகள் தொங்கு நாடாளுமன்றத்துக்கு வழிவகுத்த நிலையில், பிரிட்டிஷ; நாணயமான பவுண்டு, கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது