amachsarவடமாகாண அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு விசாரணைகள் நடந்து கடந்த வடமாகன சபை அமர்வில் அது தொடர்பாக முதலமைச்சரினால் விசாரணை அறிக்கை ஒன்றும் வாசிக்கப்பட்டு இருந்தது அதில் வடமாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜாவும் ஒருவர். இதன் காரணமாகவே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அவர்; தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும், அதற்கான கடிதத்தை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கையளித்துள்ளதாகவும். எனினும் குறித்த இராஜினாமா கடிதத்தை மாவை சேனாதிராஜா ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகின்றது.

குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களின் இணக்கப்பாடு கிடைக்கப் பெறாமையால், பொறுமையை கடைப்பிடிக்கும் படி அமைச்சரிடம் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் குருகுலராஜாவின் கட்டாயத்தின் பேரில் அந்த இராஜினாமா கடிதத்தை பெற்றுக் கொண்டுள்ளதாகவும், அது உத்தியோகபூர்வமான நடவடிக்கை அல்ல எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த ஊழல் குற்றச்சாடுகள் தொடர்பில் ஆராய முதலமைச்சரால் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது. அந்த குழுவின் அறிக்கை தொடர்பில் எதிர்வரும் 14ஆம் திகதி விவாதம் ஒன்று இடம்பெறும் என முதல்வரால் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே, வடமாகாண கல்வி அமைச்சர் தமது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளார்.

மாகாண சபை உறுப்பினர் ஒருவர் இதுபோன்ற இராஜினாமா கடிதங்களை முதலமைச்சர் அல்லது சபை முன்னிலையிலேயே சமர்ப்பிக்க வேண்டும் எனவும். இராஜினாமா கடிதத்தை, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் வழங்கியது தவறு எனவும், வட மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் கருத்தக் கூறியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.