தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்க கோரி பொதுபல சேனா அமைப்பின் செயலாளர்; ஞானசார தேரரினால் அடிப்படை உரிமை மனு ஒன்று அவரின் சட்டத்தரணியின் ஊடாக உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தல் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் திட்டமிடப்பட்ட குற்றப் பிரிவினர், முறையான நடவடிக்கையின்றி தன்னை கைது செய்ய முற்படுவதாக தனது மனுவில் ஞானசார தேரர் கூறியுள்ளார். திட்டமிடப்பட்ட குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி, சட்ட மா அதிபர் உள்ளிட்ட குழுவினர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளதாக நீதிமன்ற செய்தியாளர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக சரியான விசாரணை ஒன்றை நடத்தி முடிக்கும் வரையில் அல்லது சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரையில் தன்னை கைது செய்வதை தடுக்கும் விதமாக இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறி கோரி இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.