shantha_Bandaraபுதிய அரசியலமைப்பை உருவாக்கும் குழுவின் இடைக்கால அறிக்கையை ஆய்வு செய்ததன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியினால் பிரதான முன்று விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டிருப்பதாக ஸ்ரீPலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறுகையில்.அதன்படி பிரதானமாக ஒற்றையாட்சி என்ற விடயத்தை பேணிச் செல்ல வேண்டும் என்றும், பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறிய அவர் இதனூடாக புத்த சாசானத்திற்கு ஊக்கமளித்து முன்னெடுத்துச் செல்லல் மற்றும் ஏனைய மதங்களை பின்பற்றுவதற்கு உள்ள உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் என்று கூறிhர்.
அத்துடன் மாகாணங்கள் வௌ;வேறாக தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் ஒருபோதும் மாகாணங்களை இணைக்கும் விதமாக சட்டம் இயற்றுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் சாந்த பண்டார கூறினார்.