vikiவட மாகாண அமைச்சர்களான ரி. குருகுலராசா மற்றும் பொன். ஐங்கரநேசன் ஆகியோரை தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து சுயமாக விலக வேண்டும். இரண்டு அமைச்சர்களினதும் இராஜினாமாக் கடிதங்களையும் நாளை மதியத்திற்கிடையில் எதிர்பார்ப்பதாகவும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.இதேவேளை, மேலும் இரு அமைச்சர்களான பா.டெனீஸ்வரன் மற்றும் பி. சத்தியலிங்கம் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க புதிய விசாரணக்குழு அமைக்கப்படும் எனவும் இந்த விசாரணைகள் முடிவுறும் வரை குறித்த இருவரும் இயற்கை நீதியையும் நல்லாட்சி விழுமியங்களையும் கருதி விடுமுறையில் இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் சபையில் குறிப்பிட்டார்.

தமது அமைச்சு விடயங்களில் அவர்களோ அவர்களின் பிரத்தியேக ஆளணியினரோ பங்குபற்றல் ஆகாது என்பதுடன், அவர்களின் அமைச்சுப் பொறுப்புக்களை நான் தற்காலிகமாக ஏற்றுக் கொள்கின்றேன் என்று முதலமைச்சர் கூறியதுடன், அவ் அமைச்சர்களின் செயலாளர்கள் தனக்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்று கூறினார்.
இந்த விசாரணை குழுவின் அறிக்கை தொடர்பான விஷேட விவாதம் இன்று வடாமாகண சபையில் இடம்பெற்;ற போதே முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

இன்றைய அமர்வில் முதலமைச்சரின் உரையை தொடர்ந்து விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் உரையை ஆரம்பித்த போது, எதிர்க்கட்சித் தலைவர் தவராசா உள்ளிட்ட 07 பேர் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்

வடக்கு மாகாணசபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வியமைச்சர் த.குருகுலராசா ஆகிய இருவர் மீதும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள், முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினால் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.