வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். கைதடியிலுள்ள வடக்கு மாகாண சபை வளாகத்துக்கு முன்னால் தற்போது கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்று வருகின்றது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம், பொது அமைப்புக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலதரப்பினர் கலந்து கொண்டுள்ளனர்.விக்னேஸ்வரனுக்கு எதிராக நேற்று நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை ஆளும் தரப்பு முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்கும் போராட்டத்திற்கு சமூக ஊடகங்களினூடாக அழைப்பு விடுக்கப்பட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.