K.Sivanesan Bavanதமிழ்மக்களினது நலன்களையும் எதிர்காலத்தையும் பாதுகாக்க சிந்தித்து செயற்பட வேண்டும். தமிழரசுக்கட்சி ‘தம்வழி தனிவழி’ என்ற அந்தரங்க செயற்பாட்டை ஊக்குவிக்க முனைகின்றதா? க.சிவநேசன் (பவன்) – வடமாகாணசபை உறுப்பினர் (புளொட்)

வடக்கு மாகாணசபையின், முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முற்றிலும் நீதிக்கு புறம்பானதும், தனிப்பட்ட நலன்களை மையப்படுத்தியதும் அனாவசியமானதுமாகும்.
வடக்கு மாகாணசபை உறுப்பினர்களின், அதுவும் குறிப்பாக ஆளுங்கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளிற்கு அமையவே விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பரிந்துரைகளும் சபையில் சமர்பிக்கப்பட்டுள்ளது.விசாரணைக்குழுவின் முடிவுகளை ஏற்றுக்கொள்வதும், நிராகரிப்பதும், தேவைகளின் அடிப்படையில் மேலதிக விசாரணையை கோருவதும் சம்பந்தப்பட்டவர்களினதும், திணைக்களத்தினதும் தனிப்பட்ட உரிமையும் நடபடிமுறையும் ஆகும். அதனைவிடுத்து இரவோடுஇரவாக பேரினவாத கட்சிகளுடனும், தமிழ் தேசிய அரசியல் களத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ் தேசிய இருப்பிற்கு எதிராக செயற்படுபவர்களுடனும், சாதாரண தமிழ் மக்களின் நலன்களிற்கு எதிராக செயற்படும் பிராந்திய கட்சிகளுடனும், அதன் பிரதிநிதிகளுடனும் இணைந்துகொண்டு, மக்களின் நேசிப்பிற்கும், அன்பிற்கும் உரித்தான முதலமைச்சரை பதவிநீக்க முயலுவது, பல கேள்விகளை எம் முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.

• தமிழ் தேசிய விடுதலைக்கான உணர்வையும், தமிழ் மக்களிற்கான நிரந்தர தீர்வுக்கான முன்னெடுப்புகளை உயிர்ப்புடன் வைத்திருக்க மனப்பூர்வமாக முழுமையாக செயற்படும் எமது முதலமைச்சரை அகற்ற அல்லது அரசியல் ரீதியாக முடக்க முயன்றுகொண்டிருக்கும் பேரினவாத பிரதிநிதிகளினதும் கட்சிகளினதும் நோக்கங்களிற்கு, சொந்தகட்சி மற்றும் தமிழ்இனத்தின் நலன்களை புறம்தள்ளி துணையாக செயற்படுவதிற்கு இந்த தமிழரசு கட்சி உறுப்பினர்களிற்கு தயக்கமோ நாணமோ இல்லையா????????
• பிரதி அவைத்தலைவர் அமரர் அன்ரனி ஜெகநாதன் அவர்கள் தலைமையில், அமைச்சரவை மாற்றத்தை கோரி முதலமைச்சரிடம் கடந்த காலத்தில் சமர்பிக்கப்பட்ட மனுவின் உண்மையான தாற்பரியம் என்ன???????? இம் மனுவிற்காக அன்று கூறிய காரணங்களும், இன்று செயற்படுத்தும் நடவடிக்கைகளுக்கான காரணங்களும் வேறுவேறனவையா???? அல்லது ஓரே அடிமை விசுவாசம்தானா??????

• அசமந்தமான செயற்பாடு, அதிகார துஷ்பிரயோகம், நிதி நடவடிக்கைகளில் வீண்விரயம் என சபை நடவடிக்கைகளிலும், ஆலோசனை குழுக்கூட்டங்களிலும் தொண்டை கிழிய கத்தியும், இந்த நிர்வாக தேவைப்பாடுகளை ஊடகங்களிற்கு கொடுத்தும், தாங்களே குற்றச்சாட்டுகளை கண்டுபிடித்து தெரிவிப்பவர்கள் என்ற கோதாவில் தங்களைத் தாங்களே பிரபல்யபடுத்தும் செயற்படுத்தும் செயற்பாடுகளின் உண்மைத் தன்மையினை வெளிக்கொண்டு வரும்போது மக்கள் விரோத செயற்பாடுகளுக்காக நடவடிக்கைகளுக்குள்ளாகும் பிரதிநிதிகளை பாதுகாக்க முயலும் தமிழரசுகட்சியினரின் முரண்பாடான செயற்பாடுகளின் பிண்ணனியும் நோக்கமும் என்ன என்பதை வெளிப்படையாக மக்களிடம் இவர்களினால் கூறமுடியுமா????????????

• ஏற்கனவே தமிழ்தேசிய கூட்டமைப்பின் கூட்டுதலைமைத்துவத்தையும், உறுதிப்பாட்டையும் பலவீனப்படுத்தும் வகையில் மும்முரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழரசு கட்சி, நம்பிக்கையில்லா பிரேரணைமூலம் ஒற்றுமைக்கு குந்தகமாக செயற்படுத்தும் ‘தம்வழி தனிவழி’ என்ற அந்தரங்க செயற்பாட்டை ஊக்குவிக்க முனைகின்றதா??????? இதற்காக இன விரோத கட்சிகளுடனும் பிரமுகர்களுடனும் சமரசம்செய்துகொள்ள தயாராகின்றதா???????

• முதலமைச்சரின் வெளிப்படைதன்மை, ஊழலற்ற செயற்பாடுகள் போன்ற நல்லாட்சி பண்புகளை முன்னிறுத்திய முயற்சிகளும், பேரினவாதிகளின் இனவிரோத செயற்பாடுகளுடனான சமரசமற்ற போக்கும், நல்லிணக்கம் என்ற போர்வையில் அரசாங்கம் செயற்படுத்தும் மலினத்தனமான நடவடிக்கைகளை வெளிக்கொணரும் துணிவும் தமிழரசு கட்சியின் அதிகாரகுழுவினரிற்கு ஏற்படுத்தும் சங்கடத்தை வெளிக்காட்டும் செயற்பாடா இந்த நம்பிக்கையில்லா பிரேரணை?????

• இலங்கைஅரசியலில் அதுவும் குறிப்பாக தமிழர் அரசியல் தலைமைத்துவத்தில் புதிய முன்மொழிவான நடைமுறையாக குற்றச்சாட்டுகளிற்கு பொறுப்புகூறும் பொறிமுறையினை முயலும் வடக்கு மாகாணசபை தலைமையினை பலவீனப்படுத்தும் இச் செயற்பாடனது, வடக்கிலும் தெற்கிலும் மரபாக மாறிவரும் அவலட்ச்சணமான அரசியல் செயற்பாடுகளை ‘விடுதலைபயணம்’ எனும் போர்வைக்குள் ஒளிந்துகொண்டு எம் மண்ணிலும் கற்றுக்கொடுக்க தமிழரசுகட்சி முழுமையாக தன்னை அர்ப்பணித்து செயற்படுகின்றதா?????????

• பொதுவேட்பாளராக  அனைத்து அமைப்புகளாலும் முன்மொழியப்பட்டு மாகாணசபை தலைமைத்துவத்திற்கு கொண்டுவரப்பட்ட முதலமைச்சரை அரசியல் பரப்பில்இருந்து அகற்றி, குறுகிய நோக்கங்களை கட்சி அரசியலில் மூழ்கடித்து தமிழ் மக்களை ஏமாற்றி, தமிழரசு கட்சியின் செயற்பாடுகளை தீர்மானிக்கும் சிலரின் எண்ணங்களையும் அபிலாசைகளையும் ஈடேற்ற இவர்கள் முயல்கின்றரகளா???????

இந்த சந்தேகங்கள் சில மாகாணசபை உறுப்பினர்களிற்கு மட்டுமில்லாது, பொதுமக்களிர்ற்கும் சிவில் சமுக பிரதிநிதிகளிற்கும் கட்சி பேதமின்றி எழுந்துள்ளது.
முறையான வழிநடத்தலின்றி அமைச்சரவை பற்றியும், நிர்வாகம் பற்றியும் பேசிக்கொண்டு, மாறிமாறி தீர்மானங்களை மேற்கொள்ளும் வடக்கு மாகாணசபையின் தமிழரசுக்கட்சி மாகாணசபை உறுப்பினர்கள்  சபையினதும், தமிழ்மக்களினதும்  நலன்களையும் எதிர்காலத்தையும் பாதுகாக்க சிந்தித்து செயற்பட வேண்டுகின்றோம். இத்தருணத்தில் சரியான இம் முடிவை எடுக்க தவறும்போது மக்கள் எடுக்கும் முடிவுகளினால் இவர்களின் எதிர்கால அரசியல் பயணத்தில் காணாமல்போய்விடுவார்கள் என்பதே சிவில் சமுகத்தின் கரிசனை ஆகும்..

க.சிவநேசன்   – மாகாணசபை உறுப்பினர்
வடக்கு மாகாணசபை
16ஃ6ஃ2௦17