CV-protestவட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து இன்று (17) முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.

மாவட்டத்தின் பொது அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.வட மாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், அ.புவனேஸ்வரன், கே. சிவநேசன் ஆகியோரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, பொது அமைப்புகள் சார்பில் மூன்று மாகாண சபை உறுப்பினர்களிடம் மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீளப் பெறப்பட்டால் மாத்திரமே மக்களின் கொந்தளிப்பைத் தடுக்க முடியும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.