lonvan1வடக்கு லண்டனில் உள்ள ஒரு மசூதியின் அருகே கூடியிருந்த இஸ்லாமியர்கள் மீது ஒரு வேனால் மோதப்பட்ட சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்து பலர் காயமடைந்துள்ளனர்.

இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வு உள்ளிட்ட அனைத்து விதமான பயங்கரவாதம் மீதும் பல ஆண்டுகளாக அதிகப்படியான சகிப்புத்தன்மை காட்டப்பட்டதாகவும்.சாதாரண, அப்பாவி மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், இந்த முறை புனித மாதத்தில் தங்கள் நோன்பை முடித்துக் கொண்டு மசூதியிலிருந்து செல்லும்போது பிரிட்டி முஸ்லிம்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். எல்லா வகையான தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தையும் ஒடுக்க தமது அரசு உறுதி பூண்டுள்ளதாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார்.

இது இஸ்லாமியர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்பது தெளிவாகத் தெரிகிறது. மசூதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதியாக அதிகரிக்கப்படும் என்றும்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு லண்டன் பாலத்தில் நிகழ்ந்த ஜிஹாதி தாக்குதலுக்குப் பின்னர், இஸ்லாமியர்கள் மீதுள்ள வெறுப்பால் நிகழ்த்தப்படும் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் மேயர் கூறியுள்ளார்.

காவல் அமைப்புகளால் முன்னர் அறியப்படாத அந்த வேன் ஓட்டுநர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். தான் எல்லா முஸ்லிம்களையும் கொல்ல விரும்புவதாக அவர் கோஷமிட்டதாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

தாக்குதலில் ஈடுபட்ட நபரின் பெயர், டெரன் ஆஸ்பர்ன் வயது 47 தெரியவந்துள்ளது.